அடுத்த திருமண அறிவிப்பை வெளியிட்ட வனிதா விஜயகுமார் - மாப்பிள்ளை யார்? மிரண்ட ரசிகர்கள்!

Tamil Cinema Bigg Boss Vanitha Vijaykumar Marriage
By Sumathi Mar 26, 2024 05:30 PM GMT
Report

தனது திருமணம் குறித்த கேள்விக்கு வனிதா விஜயகுமார் பதிலளித்துள்ளார்.

வனிதா விஜயகுமார்

நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

vanitha vijayakumar

நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார்.

எந்த சந்தேகமும் இல்லை; அவர்தான் ஜோவிகாவின் தந்தை - கொந்தளித்த வனிதா விஜயகுமார்

எந்த சந்தேகமும் இல்லை; அவர்தான் ஜோவிகாவின் தந்தை - கொந்தளித்த வனிதா விஜயகுமார்

 திருமணம்?

அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை.

அடுத்த திருமண அறிவிப்பை வெளியிட்ட வனிதா விஜயகுமார் - மாப்பிள்ளை யார்? மிரண்ட ரசிகர்கள்! | Vanitha Vijayakumar About Next Marriage Viral

இதற்கிடையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த வனிதா பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின், குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி பதில் பதிவில், அடுத்த கல்யாணம் எப்போ? என்ற கேள்விக்கு எதிர்பாராததை எதிர்பாருங்கள் எனவும், அடுத்த கல்யாணம் எப்பன்னு சொல்லுங்க மறக்காம கூப்பிடுங்க என்ற மெசேஜுக்கு, தமிழ்நாட்டையே இன்வைட் பண்றேன். போஸ்டர் அடிச்சு நியூஸ் கொடுக்குறேன் என பதிலளித்துள்ளார்.