விஜயகுமார் பேத்திக்கு திருமணம்; குடும்பமே குதூகலம்.. யாருமே கூப்புடல - வனிதா போட்ட போஸ்ட்!
நடிகை வனிதா பகிர்ந்துள்ள போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகுமார். இவரது முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள் உள்ளனர்.
இதில் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவர். அவரது மகள் தியாவுக்கு மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழா களைகட்டி வரும் நிலையில்,
வனிதா பதிவு
அனிதா விஜயகுமார் வீட்டில் பந்தகால் நடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. மேலும், சங்கீத் மற்றும் மெஹத்தி பங்ஷனும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், ப்ரீத்தா, ஸ்ரீதேவி என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், திருமணத்திற்கு வனிதாவை யாரும் அழைக்காத நிலையில் இன்ஸ்டா ஸ்டோரியில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ஒட்டுமொத்த கூட்டமும் ஒரு இடத்தில் சேரும் போது, நீங்க சிங்கம் போல தனியாக இருந்தால், நீங்க எவ்வளவு பவர் புல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா இலவச தங்குமிடம் அல்ல: இலங்கை தமிழரின் கோரிக்கையை நிராகரித்த இந்திய உச்ச நீதிமன்றம் IBC Tamil
