அவரைதான் அடுத்து கல்யாணம் பண்ணிக்கபோறேன் - நடிகை வனிதா விஜயகுமார் பளீச்!
திருமணம் குறித்து நடிகை வனிதா கலகலப்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா
நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
திருமணம்?
அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. இதற்கிடையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த வனிதா பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தார்.
அதன்பின், குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த கேள்விக்கு கருப்பு,
வெள்ளையெல்லாம் இல்லை பச்சையாக இருந்தால் பார்த்தவுடனேயே திருமணம் செய்துக்கொள்ளலாம் என இருக்கிறேன் எனவும், க்ரஷ் யாரும் இல்லை அந்த வயதையெல்லாம் கடந்துவிட்டேன். தற்போது எனது காதல் சினிமாதான் எனவும் கலகலப்பாக பேசியுள்ளார்.
You May Like This Video