அடுத்த திருமணம் எப்போது? கண்டிப்பா சொல்றேன் - வனிதா சொன்னதை கேட்டீங்களா?

Tamil Cinema Vanitha Vijaykumar
By Sumathi Apr 30, 2024 02:30 PM GMT
Report

திருமணம் பற்றிய கேள்விக்கு நடிகை வனிதா கூறிய பதில் வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா 

நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

vanitha vijayakumar

நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார். அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை.

கமல் கிட்ட வாய்ப்பு கேட்டா.. கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்குறாரு - போட்டுடைத்த வனிதா விஜயகுமார்!

கமல் கிட்ட வாய்ப்பு கேட்டா.. கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்குறாரு - போட்டுடைத்த வனிதா விஜயகுமார்!

அடுத்த திருமணம்?

இதற்கிடையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த வனிதா பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின், குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பேசிய வனிதா தாய்லாந்தில் தனது மகள் ஜோவிகாவுடன் புதிய பட வேலையில் பிசியாக இருந்தேன்.

அடுத்த திருமணம் எப்போது? கண்டிப்பா சொல்றேன் - வனிதா சொன்னதை கேட்டீங்களா? | Vanitha Vijayakumar About Next Marriage

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என ஃபிளைட் டிக்கெட் எல்லாம் போட்டு அழைத்தனர். எனக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்தது. அதற்காக தாய்லாந்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து இருக்கிறேன்.

மீண்டும் தாய்லாந்து புறப்படப் போகிறேன் என்றார். அப்போது, செல்வி ஆகவே இருப்பீங்களா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது? அதற்கு அவர், தமிழ்நாட்டுக்கு இப்போ இதுதான் ரொம்ப முக்கியம் என சொல்லி சிரித்து விட்டு அப்படி ஏதாவது நடந்தால் கண்டிப்பா சொல்றேன் எனத் தெரிவித்துள்ளார்.