என் அவ்வளவு விவாகரத்திற்கும் காரணம் அவர்தான் - வனிதாவே சொன்ன தகவல்!
என்னுடைய விவாகரத்திற்கு காரணம் அப்பா தான் என்று வனிதா கூறியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
வனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமாருக்கும் அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கும் மகளாக பிறந்தவர் தான் வனிதா. சினிமாவில் விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. பின் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்துக்கொண்டார். அதுவும் நீடிக்காமல் பிரிந்தார். அவரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனிதா,
உறவில் விரிசல்
நான் பார்த்து வியந்த ஆண் என்றால் என்னுடைய தந்தை விஜயகுமார் தான். ஒரு மனைவியை வைத்திருக்கும் ஆண்களே திண்டாடுவார்கள். ஆனால், என்னுடைய அப்பா இரண்டு மனைவிகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்து நடத்தியதால் தான் இப்போதும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்.
வீட்டு வேலை, குடும்பம், தொழில் என எல்லாத்தையுமே சிறப்பாக கையாளுவார். அப்படி என்னுடைய அப்பாவை பார்த்ததால் தான், என்னுடைய வாழ்க்கையில் வந்த எல்லா ஆண்களும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.
அது அமையாததால் தான் எனக்கு அந்த ஆண்களுடனான உறவை ஏற்றுக் கொள்ள மனம் ஒத்துக்கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போது வனிதா படங்கள், பிசினஸ் என பிஸியாக இருந்து வருகிறார்.