ரகசிய டேட்டிங்..ரசிகர் வெளியிட்ட புகைப்படங்கள் - சிக்கிக் கொண்ட ராஷ்மிகா மந்தனா!
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா டேட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா
தெலுங்கு சினிமாவில் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இதனையடுத்து கீதா கோவிந்தம் , டியர் காம்ரெட், டாக்சி,பேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெற்றியைக் கொடுத்தது. மேலும் தமிழ் ,தெலுங்கு முக்கிய நடிகராக வலம்வருகிறார்.
இந்த நிலையில் டியர் காம்ரெட் படத்தின் மூலம் நெருக்கமான நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாகவும் இருவரும் அடிக்கடி வெளியில் ஒன்றாக செல்வதாகவும் பல மாதங்களாகச் செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால் இதற்கு காரணம், விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் எந்தவித ரியாக்ட்டும் செய்யவில்லை.
இந்த சூழலில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக இணைந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் இணையத்தில் இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்
டேட்டிங்
மேலும் அதுமட்டுமில்லாமல் இதனை உறுதி படுத்தும் விதமாக ஹோட்டல் ஒன்றில் ஒரு நல்ல உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக ராஷ்மிகாவும் அவரது சோசியல் மீடியா தளத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஆனால், அந்த புகைப்படத்தில் ராஷ்மிகா அவருடன் இருக்கும் நபர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்த இரண்டு புகைப்படத்தில், ராஷ்மிகா உடை நீல நிற அணிந்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
