திருமணத்திற்கு தயாராகும் நடிகை கீர்த்தி.. மாப்பிள்ளை யார் தெரியுமா?வெளியான அறிவிப்பு!
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை கீர்த்தி
மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜீவ் அஞ்சல் இயக்கத்தில் வெளியான பைலட்ஸ் படத்தில் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.தொடர்ந்து பல்வேறு மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் கீர்த்தி சுரேஷ் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பைரவா, ரஜினி முருகன், மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
திருமணம்
இதனையடுத்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் ,இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அவரது நீண்ட நாள் நண்பரைக் கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.ஆனால் இது குறித்து அவரது குடும்பத்தினர் தரப்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...! IBC Tamil