அதிக திருமணம்; அந்த தமிழ் நடிகை யார் தெரியுமா? பரவும் தகவல்!

Manjula Vijayakumar Tamil Cinema Vanitha Vijaykumar Marriage
By Sumathi Nov 25, 2024 06:00 PM GMT
Report

அதிக திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகை குறித்த தகவல் பரவி வருகிறது.

வனிதா விஜயகுமார் 

நடிகர் விஜயகுமாருக்கும் அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கும் மகளாக பிறந்தவர் தான் வனிதா. சினிமாவில் விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த வனிதா,

vanitha vijayakumar with parents

கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதால் சினிமாவை விட்டு விலகினார். நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர்.

இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார். அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

திருமணமாகி 1 வருஷம்; இன்னும் என் வயிற்றில்.. நடிகை ராதாவின் மகள் உருக்கம்!

திருமணமாகி 1 வருஷம்; இன்னும் என் வயிற்றில்.. நடிகை ராதாவின் மகள் உருக்கம்!

 4வது திருமணம்?

இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. பின் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்துக்கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து சில நாட்களில் பீட்டர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அதிக திருமணம்; அந்த தமிழ் நடிகை யார் தெரியுமா? பரவும் தகவல்! | Many Marriages In Tamil Cinema Vanitha Vijayakumar

இதற்கிடையில் வனிதா பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின், குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும், இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் அடுத்த திருமணம் குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டையே இன்வைட் பண்றேன். போஸ்டர் அடிச்சு நியூஸ் கொடுக்குறேன் என பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.