வந்தே பாரத் ரயிலின் முதல் ஸ்லீப்பர் கோச் - எப்போது இயக்கப்படும் தெரியுமா?
வந்தே பாரத் ரயிலின் முதல் ஸ்லீப்பர் கோச் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
வந்தே பாரத்
நாட்டில் ரயில் பயணத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது.
அதன்படி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் USB சார்ஜிங், யூனிஃபைட் ரீடிங் லைட், விஷுவல் இன்பர்மேஷன் சிஸ்டம், இன்சைட் டிஸ்பிளே பேனல், செக்யூரிட்டி கேமராக்கள், மாடுலர் பேன்ட்ரி மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி பயணிகளுக்கு, குளிக்க வெந்நீர் போன்ற அனைத்து நவீன வசதிகளும் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்லீப்பர் கோச்
இந்த ரயில் மணிக்கு சுமார் 160 கிமீ வேகத்தில் இயக்கப்படும். இது அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தை தொடும். மேலும், பயணிகளுக்கான பாதுகாப்புடன், லோகோ பைலட் மற்றும் அட்டடென்டென்ட்ஸ்களுக்கான வசதிகள், 11 ஏசி 3 tier, 4 ஏசி 2-tier மற்றும் 1 ஏசி-முதல் வகுப்பு என 16 பெட்டிகள் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்த ரயிலில் மொத்தம் 823 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் வசதி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது, புதுடெல்லி மற்றும் ஜம்மு&காஷ்மீர் இடையே ரயில் இணைப்பை மேம்படுத்த,
இந்திய ரயில்வே வரும் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையைத் தொடங்க பரிசீலித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.