சென்னையில் காலை உணவு.. மதியம் நாகர்கோவிலில் சாப்பாடு - வந்தாச்சு வந்தே பாரத்!

Chennai Tirunelveli
By Sumathi Aug 28, 2024 07:32 AM GMT
Report

சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.

வந்தே பாரத் 

சென்னை - நாகர்கோவில் இடையே வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக வரும் 31-ம் தொடங்கி வைக்கவுள்ளார்.

vande bharat

இதற்கிடையில் இந்த ரயில் இயக்கப்படும் நேரம், வழித்தடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு இன்ப்ரா தனது எக்ஸ் தளத்தில் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.

எல்லாம் ரெடி; வந்தாச்சு நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில், இனி ஈஸி - எங்கெல்லாம் நிறுத்தம்?

எல்லாம் ரெடி; வந்தாச்சு நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில், இனி ஈஸி - எங்கெல்லாம் நிறுத்தம்?

நேரம், வழித்தடம்

தாம்பரத்திற்கு 5.23 மணிக்கு சென்று சேரும். 2 நிமிடங்கள் தாம்பரத்தில் நிற்கும் இந்த ரயில் 5.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் (6.52/6.55 - வரும் நேரம் / புறப்படும் நேரம்) , திருச்சி (8.55 / 9.00), திண்டுக்கல் (9.53 / 9.55), மதுரை (10.38 / 10.40), கோவில் பட்டி (11.35 / 11.37), நெல்லை (12.30 / 12.32) வழியாக நாகர் கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்து சேரும்.

சென்னையில் காலை உணவு.. மதியம் நாகர்கோவிலில் சாப்பாடு - வந்தாச்சு வந்தே பாரத்! | Chennai To Nagercoil Vande Bharat Train Details

மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நெல்லை (3.18/3.20), கோவில் பட்டி (3.58/4.00), மதுரை (5.03/5.05), திண்டுக்கல் (5.48/5.50), திருச்சி (6.45/6.50), விழுப்புரம் (8.53/8.55), தாம்பரம் (10.28/10.30) வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்து சேரும்.

இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெற்கு ரயில்வே இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.