எல்லாம் ரெடி; வந்தாச்சு நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில், இனி ஈஸி - எங்கெல்லாம் நிறுத்தம்?
திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
நெல்லை - சென்னை
வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 24ம் தேதி இயக்கப்பட உள்ளது.
இதன் மூலம், 7 மணி நேரம் தான் பயண நேரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இது செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும்.
வந்தே பாரத்
இந்த நிறுத்தங்களில் எல்லாம் இந்த ரயில் நிற்கும். ஜங்ஷன் அல்லாத மற்ற பெரிய ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும் வாய்ப்புள்ளது.
மேலும், வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.