நெல்லைக்கும் வருதே வந்தே பாரத்; ரயில் கட்டணம் இவ்வளவா? ஷாக்கில் பயணிகள்!
நெல்லைக்கு விரைவில் வந்தே பாரத் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.
வந்தே பாரத்
தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி - சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கான அறிவிப்பை சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்தார். அதுகுறித்து கால அட்டவணை ஒன்று அதிகம் பகிரப்பட்டது. அதில், ரயில் திருநெல்வேலியிருந்து காலையில் புறப்பட்டு மதியம் சென்னை சென்று விட்டு, மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு திருநெல்வேலி வந்து சேருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
சென்னை - நெல்லை
ஆனால், திண்டுக்கல் - மதுரை - நெல்லை இடையிலான தண்டவாளத்தை 1330 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும். அத்துடன் ரயில்வே அறிவித்தபடி, ஆகஸ்ட் மாதம் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஏசி சேர் கார், எக்கனாமிக் சேர் கார் ஆகிய 2 வகுப்புகளில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏசி சேர் கார் பயண கட்டணம் 3000 ரூபாய் வரை இருக்கலாம் என்றும், எக்கனாமி சேர் கார் பயண கட்டணம் 1400 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், உணவும் வழங்கப்பட உள்ளதாம்..
வந்தே பாரத் ரயிலின் அனைத்து பராமரிப்பு பணிகளும், இந்த ஜூலை மாதம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.