வந்தே பாரத் ரயிலின் மீது தாக்குதல் : பதட்டத்தில் ஆந்திர மாநிலம்
By Irumporai
பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் ரயில்
கடந்த சில நாட்களாக வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏர்படுத்திய நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில் தொடங்க இருந்தது.
கல்லெறி தாக்குதல்
இந்த நிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த இந்த வந்த பாரத் ரயில் மீது நேற்று மர்ம நபர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது.
வந்தே பாரத ரயில் தொடங்கும் முன்பே சோதனை ஓட்டத்தின் போது கல்லெறி தாக்குதல் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.