வந்தாச்சு.. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் - எப்போதிருந்து தெரியுமா?
படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத்
சீட்டிங் வசதியுடன் மட்டும் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் உருவாக்க முடிவு செய்து ரெடியாகியுள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்தியாவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கும் என கூறப்படுகிறது.
இந்த படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மிக நீண்ட தூரத்தில் இருக்கும் நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக டெல்லியில் இருந்து மும்பை வரையிலான ரோட்டில் இந்த ரயில் இயக்கப்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
சிறப்புகள்
பெங்களூருவில் இந்த ரயில் தற்போது கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். இதில் பத்து பெட்டிகள் 3 டயர் ஏசி பெட்டிகளாக வழங்கப்பட்டுள்ளன. நான்கு பெட்டிகள் 2 டயர் ஏசி பெட்டிகளாக வழங்கப்பட்டுள்ளன.
ஒரு பெட்டி மட்டும் முதல் வகுப்பு பெட்டியாக இணைக்கப்பட்டுள்ளது. இதுபோக ஒரு பெட்டியை சீட்டிங் மற்றும் லக்கேஜ் ரேக் பயன்பாட்டிற்காக உபயோகம் செய்யும் வகையில் இணைத்துள்ளார்கள்.
130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 220 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்படும் என தெரிகிறது.