வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவு; ஐஆர்சிடிசி பரிமாறிய கரப்பான்பூச்சி - பதறிய ஜோடி!

Delhi Indian Railways
By Sumathi Jun 21, 2024 03:46 AM GMT
Report

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கரப்பான்பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவில் கரப்பான்பூச்சி

போபாலில் இருந்து ஆக்ராவிற்கு சென்ற வந்தே பாரத் ரயிலில் இளம்ஜோடி பயணம் செய்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது.

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவு; ஐஆர்சிடிசி பரிமாறிய கரப்பான்பூச்சி - பதறிய ஜோடி! | Cockroach Found In Meal Served Vande Bharat Train

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விதித் வர்ஷ்னி என்ற நபர், தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார். மேலும், மோசமான சுகாதார சேவைகள் குறித்து புகார் தெரிவித்ததோடு, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முதல் இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டிக்கெட் விற்பனையாளரான ஐஆர்சிடிசி வரை பலரையும் டேக் செய்திருந்தார்.

ஆசைப்பட்டு தயிர்ப்பூரி வங்கிய கர்ப்பிணி பெண் - இப்படி ஒரு கொடுமையா நடக்கணும்!

ஆசைப்பட்டு தயிர்ப்பூரி வங்கிய கர்ப்பிணி பெண் - இப்படி ஒரு கொடுமையா நடக்கணும்!

ஐஆர்சிடிசி பதில்

உணவுடன் கரப்பான் பூச்சி படத்தையும் பதிவிட்டிருந்தார். உணவு விற்பனையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியதோடு, மேற்கொண்டு இது எவருக்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு உடனே பதிலளித்த ஐஆர்சிடிசி, "உங்களுக்கு ஏற்பட்ட மோசமான பயண அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விவகாரம் தீவிரமாகப் பார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சேவை வழங்குநருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு உற்பத்தி மற்றும் தளவாட கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.