மக்களே ஆபத்து...ட்ரெண்டிங் facial செய்த பெண்களுக்கு எச்ஐவி தொற்று உறுதி!
வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் facial
பலர் தங்களது சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். குறிப்பாக பெண்கள் தங்களது அழகுக்கு கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதற்காக சலூன்களுக்குச் சென்று அனைத்து விதமான அழகு சிகிச்சைகளையும் செய்து வருகின்றனர். இப்போது பல வகையான முக சிகிச்சைகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஆனால், இந்த மாதிரியான டைமுறைகளில் சில உயிருக்கு ஆபத்தான அபாயங்களும் அதில் அடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போதைய ட்ரெண்டிங் வாம்பயர் ஃபேஷியலை செய்துகொண்ட சில பெண்களுக்கு எச்ஐவி தொற்று உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அவரவர் ரத்தத்தை எடுத்த பிறகு அதில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து எடுத்து, சிறிய ஊசி மூலம் பிளாஸ்மாவை மீண்டும் தோலில் செலுத்தும் முறை தான் வாம்பயர் ஃபேஷியல் என்று சொல்லப்படுகிறது.
எச்ஐவி தொற்று
இப்படி ஊசி போடுவது ஆரோக்கியமான சரும செல்களின் வளர்ச்சியை தூண்டி, இளமையான தோற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகெர்கியூ ஸ்பாவில் இந்த முறையில் சிகிச்சை மேற்கொண்ட 2 வாடிக்கையாளர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு மூடப்பட்ட அல்புகெர்கியூ ஸ்பாவிற்கு எதிரான வழக்கை அரசு மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் அதே ஸ்பாவில் வாம்பையர் ஃபேஷியல் செய்து கொண்ட மற்றொரு நபருக்கு எச்ஐவி தொற்று இருந்துள்ளது.
இதனால், அங்கு சிகிச்சை மேற்கொண்ட 5 நபர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதாக DOH தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.வாம்பயர் ஃபேஷியலில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை கிருமி நீக்கம் செய்யாமல் இருந்தால், ரத்தத்தில் பரவும் நோய் பரவுவது சாத்தியமாகும்.
மேலும், இந்த ஃபேஷியல்களுக்கு FDA அங்கீகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக ஸ்பாவின் உரிமையாளர் உரிமம் இல்லாமல் மருத்துவப் பயிற்சி செய்ததுடன், ஐந்து குற்றச்சாட்டுகளுக்கான குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு கடந்த 2022 ல் மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும்,