அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய 14 சிறுவர்கள் - HIV பாதித்த கொடூரம்!
அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக்கொண்ட 14 சிறுவர்களுக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளது.
மரபணு குறைபாடு
உத்தரப்பிரதேசம், 6-16 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்கள் தலசீமியா எனும் ரத்த மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் கான்பூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக்கொண்டனர்.
அதன்பின், அவர்களுக்கு HIV தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஹெபடைட்டிஸ் உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIV தொற்று
பாதிக்கப்பட்ட குழந்தைகளில், ஏழு பேருக்கு ஹெபடைடிஸ் பி, ஐந்து பேர் ஹெபடைடிஸ் சி மற்றும் இருவர் எச்ஐவிக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்த தானம் செய்யும்போது ஏற்பட்ட தவறு இதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதனையடுத்து தற்போது இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே மருத்துவமனையில் சிறுவர்களுடன் சேர்த்து 180 தலசீமியா நோயாளிகள் ரத்தம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.