தகாத உறவில் உல்லாசம்: மனைவிக்கு HIV ரத்தத்தை செலுத்திய கணவர்!
மனைவிக்கு, கணவர் ஹெச்ஐவி ரத்தத்தை செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
ஆந்திரா, தாடேபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரண்(40). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டிலிருந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், வரதட்சணையை அந்த பெண்ணின் குடும்பம் தரவில்லை எனவும்,
ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை எனவும் மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இவர் மீது அவரது மனைவி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் ஹெச்ஐவி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். தனக்கு ஹெச்ஐவி வைரஸ் நோய் ஏற்பட்டதிற்கு கணவரின் சதிச்செயல்தான் காரணம்.
HIV ரத்தம்
ஒருமுறை உடல்நிலையை சரியாக வைத்துக்கொள்ளவதற்கு எனக்கூறி, ஊசி ஒன்றை கணவர் தனக்கு செலுத்தினார். அதில் இருந்துதான் தனக்கு ஹெச்ஐவி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கணவருக்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்தது.
அதன் பின்பே ன்னை சித்ரவதை செய்ய ஆரம்பித்து, தன்னிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சித்தார். இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது கர்ப்பம் தரித்தபோது உனக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சமாளித்ததாக தெரிவித்துள்ளார்.