பெண்ணை திருப்தி படுத்தலைனா.. துரோகம் பண்றீங்கனு அர்த்தம் - சொன்னது வைரமுத்து!

Vairamuthu
By Sumathi Oct 24, 2023 02:30 PM GMT
Report

இல்லற வாழ்க்கை குறித்து கவிஞர் வைரமுத்து பேசியுள்ள தகவல் பகிரப்பட்டு வருகிறது.

 வைரமுத்து

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ”உங்களை நம்பி வரும் பெண்ணை நீங்கள் முழுமை செய்யாதவனாக இருப்பீர்கள் என்றால், அவளுக்கு நீங்கள் துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

பெண்ணை திருப்தி படுத்தலைனா.. துரோகம் பண்றீங்கனு அர்த்தம் - சொன்னது வைரமுத்து! | Vairamuthu About Physical Satisfaction Youngsters

ஒரு பெண்ணை நிறைவு செய்வதும், முழுமை செய்வதும் அவளை மதிக்கின்ற பணிகளில் ஒன்றாகும். மனைவிக்கு மலர்களை வாங்கித் தருவது, தங்கம் வாங்கித் தருவது, இனிப்பு வாங்கி தருவது மட்டுமே ஒரு கணவனின் பெரும் செயல் அல்ல.

தாம்பத்தியம் 

உங்களிடம் அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியும். அதை நீங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்றால், போதை பழக்கத்தை விட்டு தயவு செய்து வெளியேறுங்கள். நிகழ்கால தாம்பத்தியத்தை அது பாதிக்காவிட்டாலும், எதிர்கால தாம்பத்தியத்தை அது கண்டிப்பாக பாதிக்கும்.

vairamuthu

தாம்பத்தியம் குறைபட்டு போனால் வாழ்வில் ஒரு குறை வரும் குறை. இந்தக் குறை உங்களை எந்தெந்த துன்பங்களுக்கு இட்டுச் செல்லும் என்பது உங்களுக்கே தெரியாது.

சனாதனம்: திருவள்ளுவரை கொண்டாடுகிறீர்கள்.. உதயநிதியை எதிர்ப்பது ஏன்? - வைரமுத்து டுவீட்!

சனாதனம்: திருவள்ளுவரை கொண்டாடுகிறீர்கள்.. உதயநிதியை எதிர்ப்பது ஏன்? - வைரமுத்து டுவீட்!

சில ஆண்கள் மற்றும் பெண்களின் வாக்குமூலங்களை கேட்டு, சில துயரங்களை நான் உணர்ந்திருக்கிறேன். அந்த துயரங்களுக்கு புதிய தலைமுறை ஆட்பட்டு விடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.