சனாதனம்: திருவள்ளுவரை கொண்டாடுகிறீர்கள்.. உதயநிதியை எதிர்ப்பது ஏன்? - வைரமுத்து டுவீட்!

Udhayanidhi Stalin Twitter Vairamuthu
By Vinothini Sep 05, 2023 06:10 AM GMT
Report

கவிஞர் வைரமுத்து உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனம் குறித்து பேசியுள்ளார்.

மாநாடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றம் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசினார்.

vairamuthu-tweet-on-udhayanidhi-sanatana-issue

அதில், "சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்றார். இது குறித்து பல சர்ச்சை பேச்சுகளும் எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது.

வைரமுத்து டுவீட்

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "சனாதனம் என்பதும் சனாதன எதிர்ப்பு என்பதும் காலங்காலமான கருத்துருவங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என்பது சனாதனக் கருத்து

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு திருக்குறளைத்தான் உதயநிதி பேசியிருக்கிறார் திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன்?" என்று கூறியுள்ளார்.