ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்!
ஒரே நேரத்தில் நடக்கவிருந்த அக்கா-தங்கை திருமணம் நின்றுள்ளது.
அக்கா-தங்கை திருமணம்
உத்தர பிரதேசம், கர்னாவால் கிராமத்தைச் சேர்ந்த அக்கா - தங்கை இருவருக்கும் ஒரே மேடையில், கல்யாணம் செய்ய வேண்டும் என பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து மணமகன்களை தேடி திருமணம் முடிவானது.
பின், மணமகள்கள் இருவரும் அலங்காரம் செய்து கொள்வதற்காக, பியூட்டி பார்லருக்கு கிளம்பி மேக்கப் செய்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்த காருக்கு முன்னால், பைக் ஒன்று சென்றுள்ளது. அதில் 3 இளைஞர்கள் பயணித்துள்ளனர்.
உறவினர்கள் சோகம்
அந்த சமயம் கார் லேசாக அந்த பைக்கில் இடித்துவிட, 3 இளைஞர்களும், பைக்கிலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள், மேக்கப்புடன் உட்கார்ந்து கொண்டிருந்த மணமகள்கள் 2 பேரையும், காரிலிருந்து வெளியே அழைத்து தாக்கியுள்ளனர்.
மேலும், சேற்றை அள்ளி, மணமகள்களின் முகத்தில் வீசியுள்ளனர். இதற்கிடையில் சம்பவம் அறிந்து விரைந்த உறவினர்கள், இளைஞர்களை சுற்றி வளைத்துள்ளனர். பின், இளைஞர்கள், தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுடன் திருமண மண்டபத்துக்கு வந்து அங்கு நின்ற கார்களை அடித்து உடைத்துள்ளனர்.
இதில் மணமகன்கள், அந்த கல்யாண பெண்களை திருமணம் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளனர். பின் கலவரம் குறித்து அறிந்த போலீஸார் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் மணமகன்கள் திருமணம் செய்ய மறுத்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.