இனி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 - முதல்வர் அறிவிப்பு!
குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேகா குப்தா
பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாநிலத்தின் 9வது முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். பர்வேஷ் வர்மாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் துணை முதல்வர் பவன் கல்யாணும் விழாவில் பங்கேற்றனர்.
மேலும் விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 50,000 பேர் பங்கேற்றனர். சுமார் 25,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரேகா குப்தா பேசுகையில், டெல்லி முதல்வராக பதவியேற்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.
ரூ.2,500 உதவித் தொகை
எனக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைமைக்கு மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதன்படி அடுத்த மாதம் 8-ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,500 டெபாசிட் செய்யப்படும். முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சிக் காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாபை வாரியிறைத்து சீஸ் மஹால் புதுப்பிக்கப்பட்டது.
அந்த பங்களாவில் நான் குடியேற மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் பாஜகவின் ஒரே பெண் முதல்வர் என்ற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார்.