எருமை மாடுகள் வாங்குவதற்காக 2வது திருமணம் செய்த பெண் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
எருமை மாடுகள் வாங்குவதற்காகப் பெண் ஒருவர் 2வது திருமணம் செய்துள்ளார்.
2வது திருமணம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் திருமண திட்டத்தின் கீழ் ஏழை , எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்து ₹35,000 பணமும் பல்வேறு பரிசுப் பொருட்களை அரசு வழங்கி வருகிறது.
அதன்படி, ஹாசன்பூரில் உள்ள கல்லூரியில் இலவச திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்,300 ஜோடிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்து கொண்டனர். ஜோடிகள் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்பு திருமணம் நடக்கும் அரங்கிற்குள் சிலர் நுழைந்தனர்.
அப்போது அஸ்மா - ஜபேர் அகமது என்ற ஜோடிக்குத் திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்த போது அஸ்மா திருமணமானவர் என்பது தெரியவந்தது.
எருமை மாடு
இவருக்கும் நுார் முகமது என்பவருக்கும் கடந்த 3ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அஸ்மா கணவரைப் பிரிந்து பெற்றோருடன் அஸ்மா வாழ்ந்து வருகிறார்.
இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.மேலும் விசாரணையில் இந்த திருமணத்தின் மூலம் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைப் பிரித்துக்கொள்ள புதிய மணமகனுடன் ஒப்பந்தமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த திருமணத்தில் கிடைக்கும் ₹35,000 பணத்தில் எருமை மாடுகள் வாங்க அஸ்மா திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.