ரூ.500 லஞ்சம் கொடுக்கவில்லை - இளைஞரின் பாஸ்போர்ட்டை கிளித்தெறிந்த தபால்காரர்!
500 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், இளைஞரின் பாஸ்போர்ட்டை தபால்காரர் கிழித்தெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.500 லஞ்சம்
உத்தரப் பிரதேசம், லக்னோவில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல நினைத்த ஒருநபர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார்.
தொடர்ந்து அட்ரஸ் வெரிபிகேஷன், காவல்துறை அனுமதி உள்ளிட்ட அனைத்தும் முடிந்த பிறகு பாஸ்போர்ட் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், பாஸ்போர்ட்டை கொடுப்பதற்கு தபால்காரர் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை தரமறுத்து சம்பந்தப்பட்ட நபர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தபால்காரர் செய்த செயல்
இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், அந்த தபால்காரர் ஒவ்வொரு தபால் கொடுப்பதற்கும் 100 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.