பாஸ்போர்ட்டை வைத்து ஒரு திருமணத்திற்கே ஆப்பு வைத்த வளர்ப்பு நாய் - அதிர்ந்து போன மணமகன்!

United States of America Wedding World
By Jiyath Aug 22, 2023 11:13 AM GMT
Report

திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் நாய் ஒன்று மணமகனின் பாஸ்போர்ட்டை மென்று தின்றுள்ளது.

திருமணம்

அமெரிக்காவின் பாஸ்ட்டனில் வசித்துவருபவர் டொனாடோ ஃப்ராட்டரோலி மற்றும் அவரின் வருங்கால மனைவி மக்தா மஸ்ரி. இவர்களின் திருமணம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி இத்தாலியில் நடப்பதாக இருந்தது. எனவே திருமணத்திற்கான சில படிவங்களை நிரப்புவதற்காக சிட்டி ஹாலுக்கு சென்றுள்ளனர்.

பாஸ்போர்ட்டை வைத்து ஒரு திருமணத்திற்கே ஆப்பு வைத்த வளர்ப்பு நாய் - அதிர்ந்து போன மணமகன்! | Dog Chews Up Grooms Passport Days Before Wedding I

வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பியபோது தங்களது செல்ல பிராணியாக சிக்கி என்ற நாய் மணமகனுடைய பாஸ்போர்ட்டின் பல பக்கங்களை கடித்து மென்று தின்பதை  பார்த்துள்ளனர். திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் இப்படி நடந்தது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது இந்த தம்பதியினர் மாற்று பாஸ்போர்ட்டை பெறுவதற்கு உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்.

மணமகன் பேச்சு

இதுகுறித்து ஃப்ராட்டரோலி கூறுகையில் 'நான் இப்போது சிறிய மன அழுத்தத்தில் உள்ளேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக உள்ளூர் அதிகாரிகள் எனக்கு மாற்று பாஸ்போர்ட் பெற்று தருவதற்கு உதவுகிறார்கள்.

உரிய நேரத்தில் பாஸ்போர்ட் பெற முடியவில்லை என்றால் தனது வருங்கால மனைவி அவரின் உறவினர்களோடு இத்தாலிக்கு செல்லும்போது நான் வீட்டில் இருக்க நேரிடும். மேலும் அவர்கள் அமேரிக்கா திரும்பியதும் நான் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று ஃப்ராட்டரோலி பேசியுள்ளார்.