Thursday, May 8, 2025

உலகிலேயே முதல்முறை; நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை - எதற்காக?

United States of America Crime
By Sumathi a year ago
Report

குற்றவாளி ஒருவருக்கு வித்தியாசமான முறையில், மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை

அமெரிக்காவைச் சேர்ந்தவர் சார்லஸ் சென்னட். இவருடைய மனைவி எலிசபெத் சென்னட். இவர் தனது மனைவி பெயரில் அதிக தொகை அளவில் காப்பீடு ஒன்றை எடுத்திருந்தார்.

smith

தொடர்ந்து அதற்காக அவரை கொலை செய்ய திட்டமிட்டு கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்குப் பணம் கொடுத்துள்ளார். அதன்பின், கொலை செய்துள்ளனர். கணவர் சார்லஸும் தற்கொலை செய்துக்கொண்டார்.

பைபிள் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை; 2 வயது குழந்தைக்கு ஆயுள் - ஷாக்!

பைபிள் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை; 2 வயது குழந்தைக்கு ஆயுள் - ஷாக்!

நைட்ரஜன் வாயு

இதனையடுத்து இந்த வழக்கில் ஸ்மித் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு, கூட்டாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், ஸ்மித்துக்கு ஊசி வழியே மரண தண்டனையை நிறைவேற்ற முயற்சி செய்து, அதிகாரிகளால் அவருடைய உடலில் மருந்துசெல்லும் இணைப்பைச் சரியாக மேற்கொள்ள முடியாததால், தோல்வியில் முடிந்தது.

உலகிலேயே முதல்முறை; நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை - எதற்காக? | Usa Man First Nitrogen Gas Execution Convicted

அதனைத் தொடர்ந்து, 2வது முறையாக மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிட்டு நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அதன்படி அறை ஒன்றில் அந்தக் குற்றவாளி கட்டிவைக்கப்பட்டார். அவருக்கு முகக் கவசம் அணிவிக்கப்பட்டது.

அதனுடன் சுவாசக் குழாய் ஒன்றும் இணைக்கப்பட்டது. சுவாசிக்கும் காற்றுக்குப் பதிலாக, அதன் வழியே தூய்மையான நைட்ரஜன் செலுத்தப்பட்டது. இதன்மூலம், சில வினாடிகளில் அவர் சுயநினைவை இழந்து 22 நிமிடங்களில் இறந்தார் எனவும், படுக்கையில் அதிகம் துடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டில், முதன்முறையாக இந்த வழியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.