ஆசையாய் வளர்த்த 2 அடி நீள பல்லி; கடித்ததில் உயிரை விட்ட உரிமையாளர் - தவித்த காதலி!

United States of America Death
By Sumathi Mar 17, 2024 04:43 AM GMT
Report

பல்லி கடித்து உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிலா மான்ஸ்டர்ஸ்

அமெரிக்கா, கொலராடோவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் வார்டு(52). 2 கிலா மான்ஸ்டர்ஸ் வகை பல்லிகளை வளர்த்து வந்துள்ளார். அந்த பல்லிகளில் ஒன்று அவரை 4 நிமிடங்கள் வரை கடித்துள்ளது.

Gila monsters

உடனேயே அவருக்கு அறிகுறிகள் தென்பட்டுள்ளது. தொடர்ந்து பல முறை வாந்தி எடுத்து, அவருக்கு சுவாசமும் நின்றுள்ளது. இதனால் 2 மணிநேரம் வரை சுயநினைவற்று இருந்துள்ளார். உடனடியாக அவருடைய காதலி அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

'பல்லி மெதுவடை' கொடுத்த டீக்கடை - அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை!

'பல்லி மெதுவடை' கொடுத்த டீக்கடை - அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை!

உரிமையாளர் உயிரிழப்பு

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடனே, வார்டின் காதலி அந்த 2 பல்லிகளையும் விலங்குகள் நல கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். மேலும், அவர் வீட்டில் இருந்த வெவ்வேறு இன 26 சிலந்தி பூச்சிகளும் விலங்குகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

ஆசையாய் வளர்த்த 2 அடி நீள பல்லி; கடித்ததில் உயிரை விட்ட உரிமையாளர் - தவித்த காதலி! | Usa Man Died From Venomous Pet Lizard Bitten

இதனைத் தொடர்ந்து ரிசோனா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் டேல் டிநார்டோ, இந்த பல்லிகள் விஷத்தன்மை வாய்ந்த ஊர்வன வகையை சேர்ந்தவை. இவற்றின் கடியானது, வலியை அதிகரிக்க செய்ய கூடியவை. ஆனால், கொல்ல கூடிய அளவுக்கு ஆபத்தில்லை.

இதற்கு முன் 1930-ம் ஆண்டு ஒருவர் இந்த வகை பல்லி கடித்து ஒருவர் உயிரிழந்து உள்ளார். அதற்கு பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.