'பல்லி மெதுவடை' கொடுத்த டீக்கடை - அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை!
மெதுவடையில் பல்லி கிடந்த விவகாரம் தொடர்பாக டீக்கடை ஒன்றுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
வடையில் பல்லி
தருமபுரி மாவட்டம், நகராட்சி அலுவலகம் அருகே கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள டீக்கடையில் ஒன்றில், சண்முகம் என்பவர் மெதுவடை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அவர் வடையை பிரித்தபோது அதில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனை கடை உரிமையாளரிடம் காண்பித்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அபராதம் விதிப்பு
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த டீக்கடைக்கு சென்று உரிமையாளரிடம் நேரடி விசாரணை நடத்தினர்.
பின்னர் அந்த கடை சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் ரூ.5,000 அபராதம் விதித்து கடையை சுகாதாரமாக வைக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மீண்டும் தாங்கள் சோதனைக்கு வரும் போது சுகாதாரமற்ற முறையில் இருந்தால் கடையை சீல் வைக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.