நாம் தூங்கும்போது கனவில் ஊர்வன விலங்கு வந்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?
life-style-health
By Nandhini
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கனவுகள் என்பது இருக்கும். அவை இரவில் தூங்கும் போது தான் பெரும்பாலும் ஏற்படும். அவ்வாறு வரும் கனவுகளில் சில ஆச்சரியமானதாகவும், அதிர்ச்சியானதாகவும், பயமூட்டக் கூடியதாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கும். ஏனெனில் அந்த கனவுகள் அனைத்தும் ஒவ்வொருவரின் வாழ்க்கை, நினைப்புகளைப் பொறுத்து வரும்.
மேலும் அத்தகைய கனவுகளை, சில மக்கள் கடவுள் தம்மிடம் ஏதோ ஒரு விஷயத்தை தான் கனவின் மூலம் தனக்கு சொல்கிறார் என்றும், சிலர் அவ்வாறு வரும் கனவுகள் அனைத்தும் நிச்சயம் உண்மையாகும் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர்.
நாம் தூங்கும்போது கனவில் ஊர்வன விலங்குகள் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் -
- தேள் கனவில் வந்தால் ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்து விட்டீர்கள் என்று அர்த்தமாம்.
- உங்களை தேள் கொட்டி விட்டது போல கனவு வந்தால் எடுத்து கொண்ட காரியத்தில் காரிய சித்தி ஏற்படுமாம்.
- பாம்பு வேகமாக செல்வது போல் கனவு வந்தால் நன்மை உண்டாக போகிறது என்று பொருளாம்.
- எறும்பு ஊர்வதை போல கனவு வந்தால் பதவி உயர்வு ஏற்படும் என்று அர்த்தமாம். எறும்புகள் கூட்டமாக சென்றால் தொழில் முன்னேற்றம் ஏற்படுமாம்.
- எறும்புகள் சர்க்கரையை சாப்பிடுவது போலவே அல்லது உணவை தூக்கிகொண்டு செல்வதை போலவோ கனவு கண்டால் நீங்கள் சேமித்து வைத்த பொருள் சிறிது சிறிதாக கரையுமாம்.
- பல்லி ஊர்ந்து செல்வது போல கனவு வந்தால் தொழில் உயர்வு ஏற்படுமாம். இரண்டு பல்லிகள் இணைவது போல கனவு கண்டால் வீட்டில் நல்லது நடக்குமாம்.
- பல்லிகள் சண்டை போடுவது போல கனவு வந்தால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுமாம்.
- பல்லி உங்கள் கனவில் வந்தால் நீங்கள் வகிக்கும் பதவிக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தமாம்.
- பாம்பு படம் எடுப்பது போல கனவு வந்தால் பொருள் விரயம் ஏற்படுமாம். பாம்பு புற்றை கனவில் கண்டால் உங்களுக்கு இன்பம் உண்டாகுமாம்.
-
பாம்பு உங்கள் உடலின் மேல் ஏறி செல்வது போல கனவு வந்தால், உங்கள் பிரச்சனைகள் படிப்படியாக விலகுமாம்.