கருக்கலைப்பு:அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டங்கள்-இந்தியால என்ன சட்டம்?
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை சட்டபூர்வமாக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அது தொடர்பான தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது, இதன் பிறகு நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கருக்கலைப்பு உரிமை
அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் இதுவே இறுதியானது இல்லை என்று கருத்து கூறியுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இப்போது அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்கள்,
கருக்கலைப்பு உரிமை பெண்களுக்கு சட்டபூர்வமானதா இல்லையா என்பது தொடர்பாக இனி சொந்தமாக விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம். அமெரிக்காவின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்கள், கருக்கலைப்பு சட்டங்கள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஜோ பைடன்
13 மாகாணங்கள் ஏற்கெனவே கருக்கலைப்பை சட்டவிரோதமாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
Today is a very solemn moment for the United States.
— President Biden (@POTUS) June 24, 2022
The Supreme Court expressly took away a Constitutional right from the American people that it had already recognized. They simply took it away. That's never been done to a right that is so important to so many Americans.
தீர்ப்புக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில், கருக்கலைப்புக்காகப் பெண்கள் பயணம் செய்வதை மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சிப்பதாகக் கூறினார்.
இந்தியா
நாட்டின் சுகாதாரத்துறை, கருக்கலைப்பு மாத்திரைகள் முழுமையான அளவில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் பைடன் தெரிவித்தார். இந்தியாவில் 1971ஆம் ஆண்டு மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டம் இருந்தது.
அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.அந்த சட்டத்தின்படி, ஒரு பெண் 12 வாரங்கள் கர்ப்பமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கருக்கலைப்பு செய்யலாம் என்று இருந்தது.
திருத்தப்பட்ட மசோதா
அதே நேரத்தில், 12-20 வாரங்களாக இருந்தால் அவர் இரண்டு மருத்துவர்களின் ஆலோசனை பெறவது கட்டாயமானது. 20-24 வாரங்களில் கருக்கலைப்பு செய்ய பெண் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் திருத்தப்பட்ட மசோதாவில் 12 வாரங்களிலும் 12 முதல் 20 வாரங்களிலும் கருக்கலைப்பு செய்து கொள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகிறது. இது தவிர, 20-24 வாரங்களாக கரு இருந்தால், சில வகை பெண்கள் இரண்டு மருத்துவர்களை அணுக வேண்டும்,
மேலும் 24 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவாக இருந்தால், மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ!