பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ!
பெண் ஆசிரியர் மீது தாக்குதலில் ஈடுபட்ட முதல்வரை கல்வித்துறை நிர்வாகம் இடைநீக்கம் செய்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
10 நிமிடம் தாமதம்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியைச் சேர்ந்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் நேற்று பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளார்.
#WATCH | Principal of a government school in Uttar Pradesh's Lakhimpur thrashed a female teacher with shoes
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 24, 2022
(Source: Viral video) pic.twitter.com/hCRiMuVsgV
இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளியின் முதல்வர் அஜித் வர்மா, தாமதமாக வந்ததற்காக பெண் ஆசிரியரை திட்டி அவருக்கு வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போட்டுள்ளார்.
செருப்பால் அடித்து
இந்த விவகாரம் தொடர்பாக பெண் ஆசிரியருக்கும் முதல்வருக்கும் காரசார விவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபம் அதிகமான நிலையில், பெண் ஆசிரியரை அந்த பள்ளியின் முதல்வர் அஜித் செருப்பால் அடித்து தாக்கியுள்ளார்.
இதன் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண் ஆசிரியை பள்ளி முதல்வர் அஜித் வர்மா மீது கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முதல்வர் தொல்லை
பள்ளி முதல்வர் நீண்ட காலமாகவே தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முதல்வரை நிர்வாகம் இடைநீக்கம் செய்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
முதலில் அந்த பெண் ஆசிரியர் அடிக்க கை ஓங்கியதாகவும், அதைத் தொடர்ந்தே தான் அடிக்கத் தொடங்கினேன் என முதல்வர் தரப்பு விளக்கம் தந்துள்ளது.
இந்த புகாரை கல்வித்துறை சார்பில் அப்பகுதியின் கல்வி அலுவலர் லக்ஷ்மிகாந்த் பாண்டே விசாரித்து வருகிறார்.
ஹனிமூனில் மியா கலிஃபாவால் சிக்கிய கணவர்.. நிகழ்ந்த சோகம்! நடந்தது என்ன?