Sunday, Apr 6, 2025

மூன்றில் ஒரு பங்கு சரியப்போகுது தங்கம் விலை; எப்போது - நிபுணர் கணிப்பு

United States of America Money Gold
By Sumathi 3 days ago
Report

தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர் கணித்துள்ளார்.

தங்கம் விலை

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்வதால் அதன் மீதான கவனம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது பலர் கவனத்தை திருப்பியுள்ளதால்,

gold price

தங்கம் விலையும் தொடர் உச்சத்தில் நீடித்து வருகிறது. சென்னையின் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.68,480க்கும், கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.8,560க்கும் விற்பனையாகி வருகிறது.

உச்சத்திலேயே நீடிக்கும் தங்கம் விலை - இப்படியே போனால் எப்படி?

உச்சத்திலேயே நீடிக்கும் தங்கம் விலை - இப்படியே போனால் எப்படி?

நிபுணர் கணிப்பு 

இந்நிலையில், உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் John Mills கணித்துள்ளார்.

மூன்றில் ஒரு பங்கு சரியப்போகுது தங்கம் விலை; எப்போது - நிபுணர் கணிப்பு | Us Stock Market Expert Gold Rate Down

தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.