இதனை மட்டும் செய்யாவிட்டால் யுபிஐ சேவை நிறுத்தப்படும் - இன்று முதல் 6 மாற்றங்கள்!
இன்று முதல் வருமானவரி உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
புதிய நிதியாண்டு 2025-26ன் முதல் நாளான (ஏப்ரல் 1) இன்று பல மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
புதிய மாற்றங்கள்
அதன்படி, 2025-26 நிதியாண்டில் 12 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்தத்தேவையில்லை.
ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மே 1 -ஆம் தேதி முதல் ஏடிஎம்களிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டணமும் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி மாற்று வங்கியின் ஏடிஎம்மிலிருந்து மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்கும் 20 முதல் 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இ-வே பில்களை ஜெனரேட் செய்ய வழங்கப்படும் அடிப்படை ஆவணங்கள் 180 நாட்களுக்கு மேல் பழையதாக இருக்கக் கூடாது. TDS பிடித்தத்திற்கான ஜிஎஸ்டிஆர்-7 படிவத்தை நிரப்புபவர்கள் ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக நிரப்ப வேண்டும்.
25 ஆண்டு மத்திய அரசுப் பணியில் இருந்தவர்கள், அவர்களின் பணிக்காலத்தின் கடைசி 12 மாத அடிப்படை ஊதியத்தின் 50 சதவிகித தொகையை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
உங்களின் மொபைல் எண் யுபிஐ உடன் இணைக்கப்பட்டு, நீண்டநாட்களாக அந்த எண்ணை பயன்படுத்தாமலோ ரீச்சார்ஜ் செய்யாமலோ இருந்தால் வங்கிக்கு சென்று உங்களின் எண்ணை உறுதி செய்து கொள்ளுங்கள். தவறினால் உங்களின் யுபிஐ ஐடி முடக்கப்படலாம்.