இனி தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு - எப்போதிருந்து தெரியுமா?
மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கணக்கீடு
தமிழகத்தில் மின்சாரத்திற்கு தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கிறது.
முதல் 100 யூனிட்கள் வீடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு ஒரு டேரிப் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் எனும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இனி மாதந்தோறும்..
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதிகளிலும் இது இடம்பெற்றுள்ளது. அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கூறுகையில்,
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு முறை நிறைவேற்றப்படும். தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் திட்டமானது அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.