தமிழகத்தின் வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் சென்னையில் இன்று 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை வாட்டி வதைக்கிறது.
நேற்று 11 இடங்களில் மட்டும் வெயில் சதம் அடித்தது, அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் சேலத்தில் நேற்று 104 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டியது.
சென்னை மீனம்பாக்கம், வேலூரில் 103 டிகிரி என்ற அளவிலும், மதுரையின் நகர் பகுதிகள், ஈரோட்டிலும் 103 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று 2 முதல் மூன்று டிகிரி வரை அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் இன்று வறண்ட வானிலை நீடிக்கும் என்றும், குறைந்தபட்சமாக 27 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம் எனவும் தெரிவித்துள்ளது.