அமெரிக்காவை ஆளப்போவது யார்? எங்கு யாருக்கு முன்னிலை? ஷாக் ரிசல்ட்!
டிரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.
அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கினார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார்.
அங்கு நேற்று ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
டிரம்ப் முன்னிலை
அதன்படி டொனால்டு டிரம்ப் 207 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். கமலா ஹாரிஸ் 179 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார்.
தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றி பெற 270 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.