உலகில் இந்தியர்களே இல்லாத நாடு இதுதான் - இப்படி ஒரு காரணமா?
உலகில் இந்தியர்கள் வசிக்காத நாடுகள் குறித்து காணலாம்.
வெளிநாடுகள்
கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இந்தியாவை சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்கு சென்று வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரியுமையை துறந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 44 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்தியர்கள் முற்றிலும் இல்லாத அல்லது மிக குறைவான எண்ணிக்கையில் உள்ள நாடுகளும் உள்ளன.
வாட்டிகன்
வாட்டிகன் உலகின் மிகச்சிறிய சுதந்திர நாடு மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக மையமாகும். இங்கு சுற்றுலா பயணிகளாக இந்தியர்கள் வந்தாலும் யாரும் வசிப்பதில்லை. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 1000 ஆகும்.
சான் மரினோ
இத்தாலியில் அமைந்துள்ள சான் மரினோ உலகின் மிக பழமையான குடியரசுகளில் ஒன்றாகும். பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் இயற்கை காட்சிகள் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை கவர்ந்தாலும் இங்கு இந்தியர்கள் யாரும் வசிக்கவில்லை. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 33,642 மட்டுமே.
துவாலு
ஆஸ்திரேலியா மற்றும் ஹவாய்க்கு நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு துவாலு. ஐநா அவையில் உறுப்புரிமை கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. இந்த நாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். இதன் மொத்த மக்கள் தொகையே 12,000 ஆகும்.
பல்கேரியா
ஐரோப்பிவின் தென் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நாடு பல்கேரியா. அழகான கடற்கரை மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல்கேரியாவில் ஒரு இந்தியரைக் கூட நீங்கள் காண முடியாது.
வட கொரியா
வட கொரியாவில் இந்தியர்கள் வசிப்பது இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இங்கு வரும் வெளிநாட்டு மக்களை அரசு கடுமையாக கண்காணித்து வருகிறது.
மேலும் இங்கு இணையம், சமூக ஊடகம் ஆகியவற்றிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. பொருளாதார வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதனால், இங்கு வேலைக்காகவோ குடியேறவோ யாரும் விரும்புவதில்லை.