உலகில் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட ஒரே நாடு - என்ன காரணம்?
உலகில் ஒரு நாட்டில் மட்டும் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள்
உலகளவில் அதிக பேர் பினபற்றும் மதங்களின் பட்டியலில் கிறிஸ்துவ மதத்திற்கு அடுத்ததாக இஸ்லாமிய மதம் உள்ளது. ஏறத்தாழ 200 கோடி பேர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர்.
குறிப்பாக மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பா போன்ற நாடுகளில் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர்.
வட கொரியா
ஆனால் வட கொரியாவில் மட்டும் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் மொத்த மக்கள் தொகையே 2 கோடியே 60 லட்சம்தான். இங்கு சர்வாதிகார ஆட்சி பின்பற்றப்பட்டு வருகிறது. மக்கள் என்ன ஹேர் ஸ்டைல் வைக்கணும் என்பது தொடங்கி, எந்த பாடல் கேட்க வேண்டும் என்பது வரை அரசு தான் தீர்மானிக்கிறது.
மதங்களை பொறுத்தவரை வடகொரியா கம்யூனிச நாடாகவும், நாத்திக அரசாகவும் அறியப்படுகிறது. அங்குள்ள மக்கள் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற உரிமை இருந்தாலும் கூட 64.3% பேர் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. வடகொரியாவின் பழமையான மதமான ஷாமனிசம் (Shamanism) மதத்தை 16% மக்கள் பின்பற்றுகின்றனர்.
மரண தண்டனை
இதற்கு அடுத்தப்படியாக ஜப்பானில் வசிக்கும் கொரிய மக்களின் பொது சங்கமான சோங்கியோனின் கொள்கையை பின்பற்றுவோரை குறிக்கும் சோங்கியோனிசத்தை (Chongryonism) 13% மக்கள் பின்பற்றுகின்றன. மேலும் புத்த மதத்தை 4.5% மக்களும், கிறிஸ்தவ மதத்தை 1.7% மக்களும் பின்பற்றுகின்றனர்.
இருப்பினும் வெளிநாட்டு சக்திகள் நுழைந்து விடக்கூடாது என இஸ்லாமிய மதத்தினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தூதரக பணியாளர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு கணக்குப்படி 3000 இஸ்லாமியர்கள் மட்டும் அங்கு வசித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களை பொறுத்தவரை தினசரி தொழுகை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்ற நிலையில் அங்கு தொழுகை நடத்த எந்த மசூதியும் கிடையாது. ஈரான் தூதரகத்தில் தூதரக பணியாளர்கள் பயன்படுத்த மட்டும் ஒரு மசூதி உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதோடு, இஸ்லாம் பற்றி பரப்புரை மேற்கொண்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.