புத்தாண்டு கொண்டாட்டம்; உள்ளாடையுடன் சுற்றும் மக்கள் - என்ன காரணம்?

United States of America Japan Festival South Africa
By Sumathi Nov 05, 2024 03:30 PM GMT
Report

விசித்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

புத்தாண்டு கொண்டாட்டம்

உலகின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் விசித்திரமாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டு மக்கள் புத்தாண்டு இரவு 12 மணிக்குள்ளாக 12 திராட்சைகளை உட்கொள்வது, அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்புகின்றனர்.

weird newyear celebration

பழைய பொருட்களை ஜன்னல் வழியே தூக்கி எறிவதை இத்தாலி நாட்டு மக்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். இதேபோல் வீட்டில் உள்ள பழைய மேசை, நாற்காலி போன்ற மரச்சாமான்களை வீதியில் வீசுவதை தென் ஆப்பிரிக்காவில் செய்து வருகின்றனர்.

ஈக்வடார் நாட்டில், தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உறவினர்களின் உருவபொம்மைகளை எரிக்கின்றனர். இதில் வித்தியாசமாக லத்தீன் மற்றும் அமெரிக்க நாட்டு ஆண்கள், காதலுக்கு சிவப்பு, சொத்துக்கு மஞ்சள், அமைதிக்கு வெள்ளை என பல வண்ண உள்ளாடைகளுடன் வலம் வருவதை பழக்கமாக கொண்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்; உள்ளாடையுடன் சுற்றும் மக்கள் - என்ன காரணம்? | Weird New Year Celebrations Around The World

ஜப்பானில் 12 மணிக்குள்ளாக 108 முறை ஒலிப்பதை அந்நாட்டு மக்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். கெட்ட ஆன்மாக்களை விரட்ட இவ்வாறு செய்வதாக கூறுகின்றனர்.

டென்மார்க்கில் தட்டுக்களை உடைக்கின்றனர். பிலிப்பைன்ஸ் மக்கள் அந்த தினத்தில் தங்களை சுற்றி வட்டமான, உருண்டையான பொருட்களை வைத்துக்கொள்வது அதிர்ஷ்டத்திற்கு உதவும் என நம்புகின்றனர். 

மனைவிகளை விருந்தாக்கும் கணவன்கள் - விசித்திர பாரம்பரியம்!

மனைவிகளை விருந்தாக்கும் கணவன்கள் - விசித்திர பாரம்பரியம்!