இந்தியாவில் ஒரு விசித்திர கிராமம்; ஆண்களுக்கு 2 திருமணம் கட்டாயம் - என்ன காரணம் தெரியுமா..?
ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் கொண்ட ஒரு விசித்திர கிராமம் குறித்த தகவல்.
இரண்டு திருமணம்
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் தேராசர் என்ற சிறிய கிராமம் உள்ளது. சுமார் 600 பேர் வசிக்கும் இந்த கிராமம் ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தது.
இந்த தேராசர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் முதல் திருமணத்திற்கு பிறகு கட்டாயமாக இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காது என்று அவர்கள் நம்புகின்றனர்.
குழந்தை பெற்றெடுக்க வேண்டுமெனில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் ஒரு கதை குறித்து அவர்களே கூறுகின்றனர்.
விசித்திர கிராமம்
பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேராசர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குழந்தை இல்லை. இதனையடுத்து அவர் செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் குழந்தை பிறந்துள்ளது.
இதேபோன்ற சம்பவம் தொடர்ச்சியாக அந்த கிராமத்தில் பல பேருக்கு நடந்துள்ளது. அன்றிலிருந்து இந்த கிராமத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் தொடங்கியதாக அவர்கள் கூறுகிறார்கள்.
தற்போது இந்த தேராசர் கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு ஆணுக்கும் குறைந்தது இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும், திருமணம் செய்துகொள்ள மறுப்போரை ஊரைவிட்டே துரத்தி விடுவார்களாம். இந்த விசித்திர கிராமம் பலரையும் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.