பைடன் உடல்நிலை மிகவும் மோசம்; மயக்கம், சோர்வு - வெளியான பரபரப்பு தகவல்!

Joe Biden United States of America
By Sumathi Jul 01, 2024 06:24 AM GMT
Report

பைடன் உடல்நிலை மற்றும் மனநிலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

 ஜோ பைடன்

அமெரிக்கா, இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகும் நிலையில் உள்ளது.

joe biden

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் பைடன் உடல்நிலை தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 81 வயதான பைடனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே நன்றாக வேலை செய்ய முடிவதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தான் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்தை பார்க்கமுடியல - ஜோ பைடன் விமர்சனம்

இதனால் தான் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்தை பார்க்கமுடியல - ஜோ பைடன் விமர்சனம்

உடல்நிலை

கடந்த வாரம் பைடன்- டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. அதில், பைடனால் சில வரிகள் கூட கோர்வையாகப் பேச முடியவில்லை. பல இடங்களில் திக்கித் திணறினார்.

பைடன் உடல்நிலை மிகவும் மோசம்; மயக்கம், சோர்வு - வெளியான பரபரப்பு தகவல்! | Us President Joe Biden Struggles Health Issues

இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட டிரம்ப் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தினார். இதனை ஒப்பிட்டு பைடன் உடல்நிலை மற்றும் மனநலன் இப்போது இப்படி இருக்கும் போது அவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதே இப்போது பலரது சந்தேகமாக உள்ளது.