இதனால் தான் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்தை பார்க்கமுடியல - ஜோ பைடன் விமர்சனம்

Joe Biden Japan China India
By Sumathi May 03, 2024 03:55 AM GMT
Report

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

 ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதனால், தீவிரமாக பிரச்சார பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

biden - modi

இதனைத் தொடர்ந்து, வாஷிங்டன்னில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பேசிய அவர், சீனா ஏன் பொருளாதாரத்தில் மோசமடைந்துள்ளது. ஜப்பானும், ரஷ்யாவும், இந்தியாவும் ஏன் பொருளாதாரத்தில் தடுமாறுகிறார்கள்.

இந்தியாவில் பொருளாதார நெருக்கடிக்கு இடமில்லை -  நிர்மலா சீதாராமன் பேச்சு

இந்தியாவில் பொருளாதார நெருக்கடிக்கு இடமில்லை - நிர்மலா சீதாராமன் பேச்சு

இந்திய பொருளாதாரம்

ஏனென்றால், அவர்கள் இனவெறி கொண்டவர்கள். அவர்களிடம் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது. மேலும், அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை விரும்புவதில்லை. ஆனால், அமெரிக்காவை புலம்பெயர்ந்தோர்தான் எங்களை வலிமையாக்குகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களை அமெரிக்கா வரவேற்கிறது.

இதனால் தான் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்தை பார்க்கமுடியல - ஜோ பைடன் விமர்சனம் | Biden Blames China Japan And Indias Economic Woes

அதனால், அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு காரணம் அவர்கள் காரணமாக உள்ளார்கள். ஆனால், சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா நாடுகளில் உள்ள அந்நிய வெறுப்பு அவர்களின் பொருளாதாரத்தை பாதிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

அங்கு புலம்பெயர்ந்தோர்கள் விவகாரம் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.