அடடே... செல்ல பிராணிகளுக்கு டேட்டிங் ஆப்-ஆ! மாஸ் காட்டும் காவல்துறை
இந்த செயலி மூலம் ஆதரவற்று இருக்கும் நாய், மற்றும் பூனைகளை தத்தெடுப்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
செல்ல பிராணிகள்
ஃப்ளோரிடாவின் ப்ரெவார் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் வளர்ப்பு பிராணிகளுக்கான டேட்டிங் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபர்எவர் ஹோம்ஸ் (Furever Homes) என்ற டேக்லைனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி மூலம்,
நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை தத்தெடுக்க உதவும், முயற்சியாக செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது நாம் பார்த்து தேர்ந்தெடுத்து வளர்க்கும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் அவைகளைப் பாதுகாக்க என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் செய்கிறோம்.
டேட்டிங் ஆப்
நம் தெருக்களில் தினந்தோறும் ஒரு நாய் அல்லது பூனையையாவது பார்த்துவிடுவோம். அவைகளுக்கு நம் எல்லோர் வீட்டிலிருந்தும் உணவு, தண்ணீர், பால் போன்றவற்றை வழங்கி ஒரு பொது சொத்துபோல கவனித்துக்கொள்ளும் கதைகள் ஏராளம்.
ஆனால் அவற்றிற்கு உடல்நலக்குறைவு ஏதேனும் ஏற்பட்டால், அதற்கான சிகிச்சை வழங்க நாம் முன்வருவோமா என்று கேட்டால், இல்லை என்பது தான் வேதனை.
செயலியின் நோக்கம்
ஜுன்னீஸ் டெண்டர் சைட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி மூலம் ஆதரவற்று இருக்கும் நாய், மற்றும் பூனைகளை தத்தெடுப்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த செல்ல பிராணிகளுக்கு அன்பும், அரவணைப்பும், ஆதரவும் தரும் குடும்பங்களை கண்டுபிடிப்பது தான் இந்த செயலியின் நோக்கம்
ஃப்ளோரிடாவின் ப்ரெவார் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் தன் Facebook பக்கத்தில் இந்த செயலியை பற்றி அறிவித்துள்ளது.
காவல் துறை நாயான K-9 ஜுன்னி என்ற நாயுடன் சேர்ந்து ஷெரிஃப் வேய்ன் ஐவி என்பவர் இந்த செயலியை கொண்டுவந்துள்ளனர்.
காவல்துறையின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான சின்மயி - புகைப்படம் வைரல்!