கடும் மன அழுத்தத்தில் நடிகை சமந்தா - ரசிகர்கள் அதிர்ச்சி

 மன அழுத்தத்தில் விடுபட  தான் பல முயற்சிகள் எடுத்து வருவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, கணவர் நாகசைதன்யாவை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம் விவாகரத்து தொடர்பாக வதந்திகள் பரவி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தான் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும்,அதிலிருந்து  விடுபட உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்கிறேன் எனவும் சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும்  இடைவிடாது படப்பிடிப்புகளில் பங்கேற்பதால் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான் என்றும், முன்பெல்லாம் வளர்ப்பு பிராணிகள் மன அழுத்தத்தை குறைக்கும் என யாராவது சொன்னால் அதை நம்புவது இல்லை. ஆனால் இப்போது அவைகளோடு சிறிது நேரம் விளையாடினால் போதும் நான் எந்த அளவுக்கு மென்மையாகிறேன் என்பதை உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இன்னும் ஓய்வு வேண்டும் என்று நினைத்தால் சினேகிதிகளுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றுலா செல்ல முயற்சிப்பேன் என்றும் சமந்தா கூறியுள்ளார். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்