இதையெல்லாம் பதக்கம்னு தந்து ஏமாத்துறாங்க - ஒலிம்பிக் குறித்து சர்ச்சையை கிளப்பிய அமெரிக்க வீரர்!

United States of America Paris 2024 Summer Olympics
By Sumathi Aug 10, 2024 06:42 AM GMT
Report

பதக்கம் தரமானதாக இல்லை என்று அமெரிக்க வீரர் நைஜா ஹூஸ்டன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒலிம்பிக் பதக்கம்

பாரிஸில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டி நாளையுடன் முடிகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்துக்கொண்டு போட்டிகளில் சாதனை படைத்தனர்.

இதையெல்லாம் பதக்கம்னு தந்து ஏமாத்துறாங்க - ஒலிம்பிக் குறித்து சர்ச்சையை கிளப்பிய அமெரிக்க வீரர்! | Us Player Says Paris Olympic Medal Poor Quality

இதற்கிடையில், ஸ்கேட் போர்டிங் விளையாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த நைஜா ஹூஸ்டன் வெண்கலம் வென்றார். இந்நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பதக்கம் தரமற்று, அதன் பொலிவையும், வண்ணத்தையும் இழந்துவிட்டது.

வினேஷ் போகத் விவகாரம் - விளையாட்டு போட்டிகளுக்கான தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

வினேஷ் போகத் விவகாரம் - விளையாட்டு போட்டிகளுக்கான தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

தொடரும் குற்றச்சாட்டு

ஒலிம்பிக் பதக்கங்கள் என்றாலே பார்ப்பதற்கே அழகாக, தரமாக இருக்கும். புத்தம் புதியதாக அனைவரையும் கவரும் வண்ணத்தில் காணப்படும். ஆனால் இம்முறை அளிக்கப்பட்ட பதக்கத்தில் தரம் குறைவு. கைகளில் வைத்திருந்த போது வியர்வையால் நனைந்து வெண்கலப் பூச்சு உதிர்ந்து, அதன் நிறம் மாற ஆரம்பித்துவிட்டது.

paris 2024

நாம் எதிர்பார்க்கும் தரம் இந்த பதக்கத்தில் இல்லை என்று கூறியுள்ளார். இதேபோல், பிரிட்டனுக்கான முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த நீச்சல் வீராங்கனையுமான ஸ்கார்லெட் மெவ் ஜென்சன் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இருப்பினும், பதக்கம் தரமற்றவையாக இருந்தாலும் அதை பற்றி கவலையில்லை, எப்படி இருந்தாலும் அது ஒரு பதக்கமே என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் கவனம் பெற்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.