அவரின் அழகு வீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறது - நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை
நீச்சல் வீராங்கனையின் அழகு வீரர்களின் கவனத்தை சிதறடிப்பதாக கூறி ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
இதில் பராகுவே நாட்டைச் சேர்ந்த 20 வயது வீராங்கனை லுவானா அலோன்சோ பெண்களுக்கான 100மீ பட்டர்பிளை நீச்சல் நீச்சல் போட்டியில் அரையிறுதியில் 0.24 வினாடிகளில் தோல்வியை சந்தித்தார்.
லுவானா அலோன்சோ
வீரர் வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தித்தாலும் மற்ற வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக இறுதி போட்டி வரை ஒலிம்பிக் கிராமத்தில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் லுவானா அலோன்சோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ளார்.
தன்னுடைய அதிகப்படியான அழகால் மற்றவீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறார் என்று ஒரு இளம் வீரர் தங்கள் நாட்டு ஒலிம்பிக் கமிட்டியில் புகாரளித்தார். இதையடுத்து, சொந்த நாட்டினாலேயே நாட்டிற்கு திரும்பும்படி லுவானா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஓய்வு
இது தொடர்பாக பேசிய பராகுவே ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் லாரிசா ஷேரர், "லுவானா அலோன்சோவின் இருப்பு பராகுவே அணிக்குள் பொருத்தமற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. நாங்கள் அறிவுறுத்தியபடி விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் இரவைக் கழிக்காததால் நாங்கள் அவரை அனுப்பிவிட்டோம்" என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் அவர்அவர் வீரர்களை உற்சாகப்படுத்துவதை விடுத்து, தனது சொந்த விருப்பங்களுக்காக யாருக்கும் தெரியாமல் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேறி வெளியில் சுற்றினார் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் நாடு திரும்பியுள்ள லுவானா அலோன்சோ, நான் வெளியேற்றப்படவில்லை இது தவறான குற்றச்சாட்டு என்பதை மறுத்துள்ள அவர் நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும், இதுவரை அனைவரும் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. மன்னிக்கவும், பராகுவே. நான் உங்களுக்கு மட்டுமே நன்றி சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.