வினேஷ் போகத் விவகாரம் - விளையாட்டு போட்டிகளுக்கான தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது வரை இந்தியா 3 வெண்கல பதக்கங்கள் வென்று தரவரிசை பட்டியலில் 64 வது இடத்தில் உள்ளது.
மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் அனுமதிக்கப்பட்ட உடல் எடையை விட 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்.
சர்வதேச தீர்ப்பாயம்
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் விளையாட்டுத்துறைக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் தனக்கு வெள்ளி பதக்கமாவது வழங்கப்பட வேண்டுமென வினேஷ் போகத் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் வினேஷ் போகத் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சாவ்லே ஆஜரானார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்க சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நடுவர் மன்றத்தின் நீதிபதியாக அனபெல் பெனட் நியமிக்க்கப்பட்டுள்ளார்.