ஒலிம்பிக்கிலிருந்து நீக்கம்; ராஜ்ய சபா எம்.பி ஆகும் வினேஷ் போகத்?
வினேஷ் போகத்தை ராஜ்ய சபா எம்பி ஆக்குவோம் என ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது வரை இந்தியா 3 வெண்கல பதக்கங்கள் வென்று தரவரிசை பட்டியலில் 69 வது இடத்தில் உள்ளது.
மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
வினேஷ் போகத்
ஆனால் அனுமதிக்கப்பட்ட உடல் எடையை விட 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்காக தங்கபதக்கம் வெல்வார் என ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த முடிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனையடுத்து தனது ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத். இது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் விளையாட்டுத்துறைக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் தனக்கு வெள்ளி பதக்கமாவது வழங்கப்பட வேண்டுமென வினேஷ் போகத் மேல் முறையீடு செய்துள்ளார்.
ராஜ்யசபா எம்.பி
வினேஷ் போகத் நீக்கப்பட்டதில் சதி உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் முழக்கமிட்டனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்போது ஹரியானாவில் ஒரு ராஜ்யசபா பதவி காலியாக உள்ளது. காங்கிரஸுக்கு பெரும்பான்மை இருந்தால் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோம் என தெரிவித்துள்ளார்.
आपदा में राजनीतिक अवसर ढूंढना कोई कांग्रेस से सीखे!!
— Babita Phogat (@BabitaPhogat) August 8, 2024
एक ओर देश व विनेश ओलंपिक में अयोग्य घोषित होने के सदमे से उभर नहीं पा रहा है दूसरी ओर दीपेंद्र जी आप और आपके पिता जी ने विनेश की हार के ऊपर राजनीति करना शुरू कर दिया है। विनेश चैंपियनों का चैंपियन है और कांग्रेस पार्टी राजनीति… https://t.co/qg7kIe1NkN
இந்நிலையில் இது குறித்து பேசிய பாஜக உறுப்பினரும், வினேஷ் போகத்தின் உறவினருமான பபிதா போகத், நாடு இன்னும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சோகத்தில் இருந்து மீளவில்லை. ஆனால் அதற்குள் காங்கிரஸ் இதை வைத்து அரசியல் செய்கிறது என விமர்சித்துள்ளார்.