17 பேரை ஊசி போட்டு கொன்ற நர்ஸ்; 760 ஆண்டுகள் சிறை - அதிரவைத்த வழக்கு!

United States of America Crime Death
By Sumathi May 05, 2024 10:56 AM GMT
Report

17 கொலை செய்த செவிலியருக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

17 கொலை

அமெரிக்கா, பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் ஹீதர் பிரஸ்டீ(41). செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் இரண்டு நோயாளிகளைக் கொன்றதற்காக முதலில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஹீதர் பிரஸ்டீ

அதைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் பல பகீர் சம்பவங்கள் அரங்கேறிய தகவல் வெளியானது. அதில், இதுவரை இவர் பணியாற்றிய 5 சுகாதார மையங்களில், 17 பேரை கொலை செய்துள்ளார்.

இரவு நேரத்தில் பணி செய்யும்போது, அங்கிருக்கும் நோயாளிகளுக்கு அதிக அளவு கொடிய இன்சுலின்களை கொடுத்துள்ளார். இதனால் அந்த நோயாளிகள் வரிசையாக இறந்து வந்துள்ளனர். நோயாளிகளிடம் கடினமாகவே நடந்துக் கொண்டுள்ளார்.

கொரோனாவால் உயிருக்கு போராடிய குழந்தை - வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்து காப்பாற்றிய செவிலியர்

கொரோனாவால் உயிருக்கு போராடிய குழந்தை - வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்து காப்பாற்றிய செவிலியர்

760 ஆண்டுகள் சிறை

அவர்கள் குறித்து வெளிப்படையாக வெறுப்பாக பேசி வந்துள்ளார். மேலும், தன்னுடன் இருப்பவர்களை அவர் வெறுப்பதாகவும், அவர்களை காயப்படுத்தப் போவதாகவும் தனது தாயாருக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பியுள்ளார். அவரே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

17 பேரை ஊசி போட்டு கொன்ற நர்ஸ்; 760 ஆண்டுகள் சிறை - அதிரவைத்த வழக்கு! | Us Nurse Killed 17 Patients Jailed 760 Years

இதுகுறித்து நீதிமன்றத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஒருவர் தெரிவிக்கையில், “அவர் உடல்நலம் சரியில்லாதவர் அல்ல. மனநோயாளியும் அல்ல.. என் தந்தையை கொன்ற அன்று அவரின் முகத்தில் சாத்தானை பார்த்தேன்” எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவரின் கொடூர குற்றத்திற்காக 380-760 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.