7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியர் - கோர்ட் அளித்த தீர்ப்பு!
செவிலியர் ஒருவர் பச்சிளம் குழந்தைகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை கொன்ற நர்ஸ்
இங்கிலாந்தில் உள்ள வடமேற்கு பகுதியில் கவுண்டஸ் ஆப் செஸ்டர் என்ற மருத்துவமனை உள்ளது. அங்கு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.
அங்கு திடீரென பச்சிளம் குழந்தைகள் உடல்நல குறைவு மற்றும் சில காரணத்தால் இறந்துபோவதை அறிந்தனர். அப்பொழுது குழந்தைகள் பிரிவில் செவிலியராக வேலை பார்த்து வந்த லூசி லெட்பி காரணம் என்று தெரியவந்தது, இவர் 8 குழந்தைகளை கொன்றதாக கூறப்பட்டது. இதனால் இவர் கைது செய்யப்பட்டார்.
கோர்ட் உத்தரவு
இந்நிலையில், போலீசார் அவரின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்பொழுது அவரது கையால் எழுதிய ஆவணம் ஒன்று கிடைத்தது. அதில், "நான் ஒரு பாவி, இதற்கு நான்தான் காரணம் இன்று உங்கள் பிறந்த நாள். நீங்கள் இங்கு இல்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்" போன்ற வாசகங்களை எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார், இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில் லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளில் 7 குழந்தைகளை கொன்றது, 6 குழந்தைகளை கொல்ல முயன்றது ஆகியவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். லூசி லெட்பி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற 21-ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.